சென்னை : மார்ச் 22ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினமான மார்ச் 22ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
கிராம ஊராட்சிகளில், கிராம சபைக் கூட்டங்கள் குறிப்பிட்ட தேதிகளில் நடத்தப்படுகின்றன. கிராம சபைக் கூட்டங்களில், ஊராட்சியின் வளர்ச்சி, தன்னிறைவு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு போன்ற விவாதங்கள் நடைபெறும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும். கிராம சபையில் குறைந்தபட்ச கோரம் குறிப்பிடப்பட்ட உறுபினர்கள், அதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளுக்கு உண்டு
உலக தண்ணீர் தினமண 22.03.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். குறைவென் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறை பின்பற்றி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
The post மார்ச் 22ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.
