×

கோயில் திருவிழா எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜமீன் இளம்பிள்ளை என்னுமிடத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் மாசி திருவிழா நடத்தக் கோரி பாரத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, சாதி என்பது மதமல்ல என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது. அதை மற்ற பிரிவினர் தடுக்க கூடாது.

ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேச்சு நடத்த வேண்டிய அவசியமில்லை. அறநிலையத் துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்த வேண்டும். கடவுள் முன் எந்த பாகுபாடும் இருக்க கூடாது. எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்காமல் திருவிழாவை நடத்த வேண்டும். தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

The post கோயில் திருவிழா எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது உயர் நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Bharat ,Chennai High Court ,Maha Maryamman Temple Masi Festival ,Jameen Ilampillai ,Namakkal ,Paramathi Vellore ,D. Bharatha Sakharavarti ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...