சென்னை: ஜெர்மன் நாட்டில் உள்ள லூப்தான்சா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, பிராங்க்பர்ட்-சென்னை மற்றும் சென்னை-பிராங்க்பர்ட் விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. நேற்று முன்தினம் நள்ளிரவு பிராங்க்பர்ட்டில் இருந்து, சென்னைக்கு வரும் விமானமும், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து பிராங்க்பர்ட் செல்லும் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் ஜெர்மன், அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்காட்லாந்து செல்லும் சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் அவதிப்பட்டனர்.
லூப்தான்சா ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, பிராங்க்பர்ட்-சென்னை, சென்னை-பிராங்பர்ட் ஆகிய 2 விமானங்கள் நேற்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி ஏற்கனவே பயணிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும், இதனால் பயணிகள் பெரும்பாலானோர் சென்னை விமான நிலையத்திற்கு வரவில்லை என்றும், தகவல் கிடைக்காத வெளியூர் பயணிகள் சிலர் வந்தவர்களுக்கு, தங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஊழியர்கள் வேலை நிறுத்தம் பிராங்க்பர்ட்-சென்னை விமானங்கள் திடீர் ரத்து appeared first on Dinakaran.
