திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர பகுதியான சாமியப்பா நகர் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி பொன்முடி 2010ஆம் ஆண்டு மேலமருதூர் கிராமத்தில் சுமார் 7 ஏக்கர் நிலத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செ ய்து வருகிறார். தற்போது 7 ஏக்கர் வயலில் ஆண்டுதோறும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இதுகுறித்து இயற்கை விவசாயி பொன்முடி கூறுகையில்,கடந்த 14 ஆண்டுகளாக பாரபரிய நெல் ரகம் சாகுபடி செய்கிறேன்.
நமது நாட்டில் பல வகையான தானியங்கள் பயிர் செய்யப்படுகின்றன. அரிசி, கோதுமை போன்ற முக்கிய உணவு தானியங்கள் தவிர்த்து சமையல் எண்ணெய், பிற உணவு பொருட்கள் தயாரிப்புக்காகவும் பல வகையான தானியங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. அந்த வகையில் சமையல் எண்ணெய் தயாரிக்கவும், உடலுக்கு பல்வேறு நன்மைகளை புரியும் ஒரு தானியமாக “எள்” இருக்கிறது. எள் அதிகம் சாப்பி ட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது.
எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும். மாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும்.
எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் எள் தொடர்ந்து உட்கொள்ளவது சிறந்தது. எள் அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.
பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்பால் உருவாகுவது குறைவாக உள்ளது போல தோன்றினால் எள் கலந்த உணவை சாப்பிட்டால் தாய்பால் சுரப்பு அதிகரிக்கும். எள்ளை ஊற வைத்த தண்ணீரை அருந்தி வந்தால் உதிர போக்கு பிரச்சனை விரைவில் குணமாகும். எள்ளையும், கருஞ்சீரகத்தையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி குறையும். எள்ளுருண்டை, எள்ளும் உளுந்தும் சேர் ந்த கொழுக்கட்டை தொட ர்ந்து கொடுக்க பூப்பெய்தல் சீக்கிரம் ஏற்படும்.
எள்ளின் கஷாயத்தால் இடுப்பு அடி வயிறுகளில் ஒத்தடம் கொடுக்க, அடிவயிற்று வலி, இடுப்பு வலி போன்றவை நீங்கும். பனைவெல்லம், எள், கரு ஞ்சீரகம் இம்மூன்றும் மாதவிடாய் காலத்திலேயே, வலி கடுப்பு உதிரச் சிக்கல் நீங்க மிகவும் பய ன்படுகின்றது என்றார்.
The post மேலமருதூர் கிராமத்தில் எள் சாகுபடியில் இயற்கை விவசாயி ஆர்வம் appeared first on Dinakaran.
