×

காரைக்குடி அருகே நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காரைக்குடி, மார்ச் 11: காரைக்குடி அருகே கோட்டையூர் கற்பகவிநாயகர், கோட்டை நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து 6ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் கால யாபூஜைகள் நடந்தது.

கும்பாபிஷேக நாளான நேற்று காலை 6 மணிக்கு ஆறாம்கால யாகபூஜைகள், காலை 7 மணிக்கு மூலஸ்தான் அபிஷேகம், காலை 9 மணிக்கு மகாபூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. காலை 10.05 முதல் 10.30 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடந்தது. இரவு 8.30 மணிக்கு அம்பாள் திருவீதி உலா நடந்தது. விழாவில் காரைக்குடி, கோட்டையூர், அழகாபுரி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post காரைக்குடி அருகே நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Nachiamman ,Karaikudi ,Kottayam Nachiamman temple ,Karaikudi, Kottayam ,Anugnai ,Vigneshwara Pooja ,Ganapathi ,Homam ,Vastu Shanthi Pooja ,ceremony ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...