கோவை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் நேற்று கோவை வந்தார். அப்போது அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய கல்வி திட்டம் என்பது நம் குழந்தைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம் என கல்வி ஆய்வாளர்கள், அறிஞர்கள் கூறுகிறார்கள். கல்வி என்பது சுகமாக இருக்க வேண்டுமே தவிர சுமையாக இருக்க கூடாது. நம் நாட்டில் மட்டும் தான் நாம் விரும்பிய கல்வியை கற்க முடியாமல் உள்ளது. முதுநிலை மருத்துவம் படிக்க மேலும் ஒரு நீட் தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது. மதிப்பெண்களை வைத்து மனித அறிவை அளவிடுவது சரியாக இருக்காது. எட்டு வயதில் ஒரு குழந்தையை பொதுத்தேர்வு எழுத சொன்னால் எப்படி? சட்டமன்றத் தேர்தலில் எல்லோரும் ஒன்றிணைந்தாலும் நான் தனியாக நிற்பேன்.
ஒன்றியத்தில் பாஜ ஆட்சி இருக்கும் வரை தமிழக மீனவர்கள் பிரச்னையில் ஏதும் மாறப்போவதில்லை. எனக்கு சொந்தக்காரர்கள் இஸ்லாத்தில் நிறைய உள்ளனர். எனக்கு நோன்பு கஞ்சி வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். ஒரு நாள் தொப்பி அணிந்து வேடம் போடும் இஸ்லாமியன் நான் அல்ல. நான் என் மக்களின் உணவுக்கானவன் அல்ல. உணர்வுக்கானவன், உரிமைக்கானவன். தம்பி (விஜய்) அதை விரும்புகிறார். அதனால் செய்கிறார். இப்தார் விருந்தில் விஜய் தொப்பி அணிந்ததால் எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
The post ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போட வேண்டாம்: விஜய் மீது சீமான் தாக்கு appeared first on Dinakaran.
