×

விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வரவேற்பு பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்வர் நடைமுறை

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: உலகம் முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மகளிருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் திராவிட இயக்கங்களும், பெரியார், கலைஞர் போன்றவர்களும் எடுத்த கடும் நடவடிக்கைகளின் விளைவாக இன்றைக்கு பெண்கள் ஆண்களுக்கு சமமாக அல்லது ஆண்களை மிஞ்சக்கூடிய அளவிற்கு உயர்ந்து நிற்கிறார்கள்.

பெண்களுக்கு சொத்தில் பங்கு என்ற மகத்தான சட்டத்தை இயற்றிய வரலாற்று பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு உண்டு. பெண்கள் சுயமாக தங்கள் காலில் நின்றிட சுய உதவி குழுக்களை அறிமுகப்படுத்திய பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு. இன்று பெண்களை அனைத்து நிலையிலும் முன்னேற்றுவதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவது அறிந்ததே.

இலவச பேருந்து திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை, என இந்த திராவிட மாடல் ஆட்சி எடுத்து வரும் நடவடிக்கையால் இன்றைக்கு தமிழ்நாட்டுப் மகளிருக்கு தலை நிமிர்ந்து நிற்கின்றனர். குறிப்பாக கட்டுமான தொழிலில் ஈடுபடக்கூடிய பெண்களுக்கு உள்ளார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறது விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வரவேற்பு பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்வர் நடைமுறை appeared first on Dinakaran.

Tags : Farmers-Workers Party ,Chief Minister ,Chennai ,Tamil Nadu ,President ,Ponkumar ,Women's Day ,International Women's Day ,Dravidian ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...