சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் கடைசி லீக் சுற்று ஆட்டத்தில் இன்று சென்னை அணி, ஜாம்ஷெட்பூர் அணியுடன் மோதுகிறது. ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 11 வது தொடர் லீக் ஆட்டங்கள் இன்னும் சில நாட்களில் முடிய உள்ளன. லீக் சுற்றில் முதல் 2 இடங்களை உறுதி செய்து விட்ட மோகன் பகான், கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நாக் அவுட் சுற்றான பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூர், ஜாம்ஷெட்பூர், நார்த் ஈஸ்ட் அணிகள் முன்னேறி விட்டன .
எஞ்சிய ஒரு இடத்துக்கான போட்டியில் ஒடிஷா, மும்பை அணிகள் உள்ளன. ஒடிஷா 24 ஆட்டங்களிலும் ஆடி முடித்து 33 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. மும்பை 23 ஆட்டங்களில் ஆடி அதே 33 புள்ளிகளுடன் ஆனால் 7வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள ஒரு ஆட்டத்தில் வென்றால் மும்பையும், தோற்றால் ஒடிஷாவும் பிளே ஆப் சுற்றில் விளையாடும்.
சென்னை உட்பட எஞ்சிய 6 அணிகளும் லீக் சுற்றுடன் வெளியேறுகின்றன. இந்நிலையில் சென்னை அணி கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொள்கிறது. சென்னை நேரு விளையாட்டரங்கில் இந்த ஆட்டம் நடைபெறும். சென்னை இதுவரை 23 ஆட்டங்களில் விளையாடி தலா 6 வெற்றி, டிரா, 11 தோல்வி என 24 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.
The post ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: ஜாம்ஷெட்பூர் அணியுடன் சென்னை இன்று மோதல்: இன்று கடைசி லீக் ஆட்டம் appeared first on Dinakaran.
