×

கடலோர கால்பந்து சாம்பியன் லீக் கன்னியாகுமரி கல்லுாரியில்போட்டிகள் இன்று துவக்கம்

சென்னை: இளம் வீரர்களுக்கான ‘கடலோரக் கால்பந்து சாம்பியன் லீக்’ போட்டிகள் இன்று கன்னியாகுமரியில் உள்ள தூத்தூரில் தொடங்குகின்றன. இது குறித்து இந்திய கால்பந்து அணி வீரர் மைக்கேல் சூசைராஜ் நேற்று கூறியதாவது: ரிலையன்ஸ் அறக்கட்டளை நாடு முழுவதும் இளம் வீரர்களை கண்டறிவதில் தீவிரமாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக நாட்டில் கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள பகுதிகள் தேர்வு செய்யப்படுகின்றன. அந்தப் பகுதிகளில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்தும் பணிகளை அறக்கட்டளை மேற்கொள்கிறது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் கடலோர கால்பந்து சாம்பியன் லீக் போட்டி நடத்தப்படுகிறது. அங்கு சனிக்கிழமை (இன்று) முதல் சிறுவர்களுக்கு 7, 9, 11, 13 வயது அடிப்படையில் 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 14 அணிகள் களம் காணும். லீக் சுற்றில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன் கோப்பைக்கான நாக் அவுட் சுற்றில் மோதும். தூத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடத்தப்படும் இந்தப் போட்டி, கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்த வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கடலோர கால்பந்து சாம்பியன் லீக் கன்னியாகுமரி கல்லுாரியில்போட்டிகள் இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Coast Football Champions League ,Kanyakumari Collegiate Botts ,Chennai ,Coastal Football Champions League ,Thoothuur ,Kanyakumari ,Michael Susiraj ,Reliance Foundation ,Kanyakumari Collegiate Bottoms ,Dinakaran ,
× RELATED ஆப்கோன் கால்பந்து; சூடானை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி