×

விருதுநகர் பொதுக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகி கன்னத்தில் ராஜேந்திரபாலாஜி ‘பளார்’

விருதுநகர்: ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்ட துவக்கத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் வழங்கப்பட்டது. அவருக்கு பலரும் பொன்னாடை அணிவித்தனர்.

அப்போது, விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் வரிசையில் வராமல் முந்தி கொண்டு பொன்னாடை அணிவிக்க வந்தார். இதைப் பார்த்து கோபமடைந்த ராஜேந்திரபாலாஜி கூட்டத்தினர் முன்னிலையிலேயே அவரை கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால், நந்தகுமார் மட்டுமின்றி அங்கிருந்த தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

The post விருதுநகர் பொதுக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகி கன்னத்தில் ராஜேந்திரபாலாஜி ‘பளார்’ appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Rajendra Balaji 'Balar ,Virudhunagar ,Jayalalithaa ,Virudhunagar National Cricket Stadium ,Rajendra Balaji ,Pandian Nagar, Virudhunagar… ,Dinakaran ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...