- ஈரோடு
- முகமது யுனுஸ்
- ரஃபிக்-ரஃபியா
- சிந்தன் நகர், கிருஷ்ணம்பாலயம், ஈரோடு
- பி. டெக் அக்ரி
- பெருந்துரை ரோட், ஈரோடு
- தின மலர்
ஈரோடு: ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகரை சேர்ந்தவர் ரபீக்-ராபியா தம்பதியினரின் மகன் முகமது யூனூஸ் (19). இவர், ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள கல்லூரியில் பி.டெக் அக்ரி 2ம் ஆண்டு படித்து வந்தார். ஆன்லைன் வர்த்தகமும் செய்து வந்தார். கடந்த மாதம் 27ம் தேதி ஆன்லைன் வர்த்தகம் செய்ய தாய் ராபியாவிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி ரூ.37 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தை முகமது யூனூஸ் ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்காக, ராபியா வேலை செய்த வீட்டுக்கு முகமது யூனூஸ் சென்று பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்துள்ளார். இதில், விரக்தியடைந்த முகமது யூனூஸ் கடந்த 28ம் தேதி 2வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது 2 தொடை எலும்புகள், கை மணிக்கட்டு முறிந்தது. கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முகமது யூனூஸ் உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆன்லைன் டிரேடிங்கிற்கு பணம் தர மறுத்ததால் மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.
