×

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

புதுக்கோட்டை: பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வருகின்ற மார்ச் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார். மார்ச் 10ம் தேதி விடுமுறையை ஈடுகட்ட மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்றும் சனிக்கிழமையை பணி நாளாக கொண்ட நிறுவனங்களுக்கு மார்ச் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை! appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Thiruvapur Muthumariamman Temple Festival ,governor ,Aruna ,Pudukkottai district ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...