- கிரிஸ்துவர்
- திருப்பூர்
- வருகை
- Tirupali
- கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர்
- இயேசு கிறிஸ்து
- கிறிஸ்தவர்களின் வருகை
- கிரே

திருப்பூர்: கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் நிகழ்வானது சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது. திருப்பூரில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாகவும். சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளிலிருந்து. 3-வது நாளில் உயிர்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று துவங்கியது. கிறிஸ்வர்களின் தவக்காலம் சாம்பல் புதன் கிழமையான் இன்றிலிருந்து., இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகையான ஈஸ்டர் வரை 40 நாட்கள் கடை பிடிக்கப்படுகிறது. இதனிடையே சாம்பல் புதனை முன்னிட்டு திருப்பூர் குமரன் சாலையில் உள்ள புனித கேத்ரீனம்மாள் தேவாலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள்.
நெற்றியில் பாதிரியார்கள்., சாம்பலில் சிலுவை அடையாளம இட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் கிறிஸ்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் பக்தியுடன் கலந்து கொண்டனர்.
The post கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் நிகழ்வானது சாம்பல் புதனுடன் தொடங்கியது appeared first on Dinakaran.
