×

மார்த்தாண்டம் அருகே போதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

மார்த்தாண்டம், மார்ச் 4: மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பிஓசி தெருவை சேர்ந்தவர் ஜோஸ்(31). தனியார் வங்கி ஊழியர். குழித்துறை அருகே குழவிளை பகுதியை சேர்ந்தவர் ஜிதின் (31). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வெட்டுவெந்நி பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு தகராறு செய்ததுடன், தகாத வார்த்தைகளால் பேசி பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

The post மார்த்தாண்டம் அருகே போதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Jose ,Kannakode BOC Street ,Jithin ,Kuzhavilai ,Kuzhithurai ,TASMAC ,Vettuvenni ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...