×

தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து.!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், நாளை பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன். தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து.!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kamal Haasan ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Makkal Needhi Maiam Party ,DMK ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...