×

சேலம் நாதகவினர் 300 பேர் விலகல்

சேலம்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுள்ள அதிருப்தியில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்நிலையில், நேற்று சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் தலைமையில் 300 பேர், அடிப்படை உறுப்பினரிலிருந்து தாங்கள் விலகி கொள்வதாக முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாள சபரிநாதன், நான் மற்றும் என்னோடு பயணித்த 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்கிறோம், என முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கட்சிக்காக உழைத்த எங்களை புறந்தள்ளி ஒதுக்கி வைத்து விடுகின்றனர். கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. எங்களது கருத்துகளை தலைமைக்கு தெரிவித்தால், எங்கள் மீதே தவறாக ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவிக்கின்றனர். கட்சி தலைமையில் உள்ள 3 நிர்வாகிகள் சரியாக செயல்படுவதில்லை. இதனால் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். தற்போது என்னுடன் பயணித்த 300 உறுப்பினர்களும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி உள்ளோம்,’ என்றார்.

 

The post சேலம் நாதகவினர் 300 பேர் விலகல் appeared first on Dinakaran.

Tags : 300 Salem playwrights ,Salem ,Naam Tamilar Party ,Seeman ,Salem District Municipal Youth Camp ,Sabarinathan ,Facebook ,Dinakaran ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...