- ஏர் இந்தியா
- மத்திய அமைச்சர்
- போபால்
- தில்லி
- சிவராஜ் சௌஹான்
- மத்திய வேளாண் அமைச்சர்
- சிவ்ராஜ் சிங் சவுஹான்
- இயற்கை விவசாய சந்திப்பு
- குருஷேத்ரா
- தின மலர்
போபால்: ஏர் இந்தியா நிறுவனம் உடைந்த மற்றும் ஓட்டை விழுந்த இருக்கையை ஒதுக்கியதற்காக ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சவுகான் கடுமையாக சாடியுள்ளார். ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், குருஷேத்ராவில் நடக்கும் இயற்கை வேளாண் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றுள்ளார். இது குறித்த அனுபவத்தை அவர் தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதில், ‘‘டெல்லி செல்வதற்காக போபாலில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ436 விமானத்தில் ஏறினேன். அங்கு எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தபோது அது உடைந்திருந்ததோடு, உட்கார்ந்தவுடன் உள்ளே சென்றது. இதனால் அதில் உட்காருவதற்கு சிரமம் அடைந்தேன். விமானத்தில் பல இருக்கைகள் இதேபோன்ற நிலையில் இருந்தது. எனது அசவுகரியத்தை பற்றி நான்கவலைப்படவில்லை. ஆனால் பயணிகளிடம் முழு கட்டணத்தையும் வசூலித்துவிட்டு குறைபாடுள்ள இருக்கைகளில் அவர்களை அமர வைப்பது நெறிமுறையற்றது.
இது பயணிகளை ஏமாற்றும் முறையல்லவா? என்று குறிப்பிட்டு இருந்தார். சவுகான் டிவீட் செய்ததை தொடர்ந்து இதனை கவனத்தில் கொண்ட ஏர் இந்தியா எக்ஸ் பதிவில், ‘’ஐயா சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக இந்த விஷயத்தை நாங்கள் கவனமாக ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
* உடனடி நடவடிக்கை
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன்நாயுடு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ இந்தப் பிரச்சினையில் நாங்கள் உடனடியாக ஏர் இந்தியாவிடம் பேசி, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினோம். எங்கள் தரப்பில் இருந்து விமான போக்குவரத்து இயக்ககத்தையும் இந்த விஷயத்தின் விவரங்களை உடனடியாக கவனிக்க உத்தரவிட்டுள்ளேன். நான் தனிப்பட்ட முறையில் சிவராஜ்சிங் சவுகானிடமும் பேசினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post போபால் டூ டெல்லி விமானத்தில் ஒன்றிய அமைச்சருக்கு உடைந்த சீட் ஒதுக்கிய ஏர் இந்தியா appeared first on Dinakaran.
