×

பொன்முடியிடம் கூடுதலாக காதி துறை ஒப்படைப்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா பறிப்பு

சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை பறிக்கப்பட்டு அமைச்சர் பொன்முடியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தற்போது பொன்முடி வனத்துறை அமைச்சராகவும், ராஜகண்ணப்பன் பால்வளத்துறை மற்றும் காதி மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சராகவும் இருந்து வருகின்றனர்.

தற்போது அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை பறிக்கப்பட்டு வனத்துறை அமைச்சர் பொன்முடியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: முதல்வர் பரிந்துரையின் அடிப்படையில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வகித்து வந்த காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தின் இலாகா வனத்துறை அமைச்சர் க.பொன்முடிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டு வனத்துறையுடன் சேர்த்து காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக தொடர்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போக்குவரத்துத்துறை அமைச்சராக அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டார். பின்னர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டேர், காதி மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இதையடுத்து, பால்வளத்துறை மற்றும் காதி, கிராமத் தொழில்துறை அமைச்சராக நீடித்தார். தற்போது அவரிடம் இருந்து காதி மற்றும் கிராமத் தொழில்துறை பதவி பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பொன்முடியிடம் கூடுதலாக காதி துறை ஒப்படைப்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Ponmudi ,Khadi ,Rajakannappan ,Chennai ,Village Industries ,Minister ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Forest ,Dairying ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...