×

திருப்பூரில் வட்டமலைக்கரை ஓடை பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 8 நாட்களுக்கு 55.30 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு ஆணை.!!

திருப்பூர்: திருப்பூரில் வட்டமலைக்கரை ஓடை பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 8 நாட்களுக்கு 55.30 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம். வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கப் பாசனப் பகுதிகளிலுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்தின் இடது மற்றும் வலது பிரதானக் கால்வாய் வழியாக, நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டும். பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் 14.02.2025 முதல் 06.03.2025 வரையிலான 20 நாட்களில் உரிய இடைவெளிவிட்டு, 8 நாட்களுக்கு 55.30 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டத்திலுள்ள 6043 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பூரில் வட்டமலைக்கரை ஓடை பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 8 நாட்களுக்கு 55.30 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு ஆணை.!! appeared first on Dinakaran.

Tags : Wattamlaikrai ,Tiruppur ,Wattamlaikari ,Tiruppur District ,Gangayam Circle ,Wattamlaira Stream Reservoir ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...