- டி.ஜே.கோவிந்தராஜன்
- Kummidipundi
- பிரஷாந்த் ஹாஸ்பிடல்ஸ்
- சோசாவரம்
- டி.
- ஜே
- கோவிந்தராஜன்
- சட்டமன்ற உறுப்பினர்
- தின மலர்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, சோழவரம் பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களிடையே உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் பிரசாந்த் மருத்துவமனைகள் சார்பில் ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கும்மிடிப்பூண்டி, சோழவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலை ஊழியர்களிடையே மன அழுத்தம், இதயம் மற்றும் நரம்பியல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கிரிக்கெட் போட்டி நேற்று புதுவாயலில் உள்ள டி.ஜெ.எஸ்.பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி ரோட்டரி கிளப், எஸ்2எஸ் எச்ஆர் மன்றம் மற்றும் ஐசிஎம்ஏ சிப்காட் ஆகியவற்றுடன் இணைந்து பிரசாந்த் மருத்துவமனை நடத்திய இந்த இறுதிப் போட்டியில் டிஜெஎஸ் குழும நிறுவனங்களின் தலைவரும், எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரசாந்த் கிருஷ்ணா மற்றும் குழும தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் போட்டியின் மூலம் திரட்டப்பட்ட ரூ.1.8 லட்சம் நிதியை கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள நன்கொடையாக பிரசாந்த் மருத்துவமனை வழங்கியது. சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, இதயம் மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதை வலியுறுத்தும் வகையில், இம்மருத்துவமனை மேற்கொண்டு வரும் ‘சேவ் யங் ஹார்ட்ஸ்’ என்னும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டி தொழிற்சாலை நிறுவனங்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மூன்று வாரங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சுற்றியுள்ள 36 நிறுவனங்களின் அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிப் போட்டியில் வெஸ்டர்ன் தாம்சன் குழு அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்துடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசையும், இந்தியா பிரைவேட் லிமிடெட், தேர்வாய் கண்டிகை அணி இரண்டாம் இடம் பிடித்து ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசையும் வென்றது.
The post மன அழுத்தத்தை போக்கும் வகையில் தொழிற்சாலை ஊழியர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.
