×

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 313 மாணவர்களுக்கு மடிக்கணினி

*துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு மடிக்கணினிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில், 313 மாணவ – மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது:முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மடி கணினி வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஐடிஐ பயிற்சி நிறுவனங்கள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவிலேயே தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து அதிக தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது.

தொழில்கல்வி படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும், மாணவர்களின் தொழில் திறனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துகிறது. அதன்மூலம், நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதனை, தொழிற்கல்வி படிக்கும் மாணவ- மாணவிகள் பயன்படுத்தி எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். அதற்கு, இந்த மடிகணினிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் ஆர்டிஓ ராஜ்குமார், ஐடிஐ முதல்வர் தனகீர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Government Vocational Training Institute ,Deputy Speaker ,K. Pichandi ,Tiruvannamalai ,ITI ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...