×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனைக்கு குவிப்பு

அரூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனை சூடுபிடித்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான மாட்டுப்பொங்கல் அன்று கால்நடைகளை குளிப்பாட்டி மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு ஆகியவற்றை புதியதாக மாற்றுவதுடன் உடல் முழுவதும் வர்ணங்கள் பூசியும், கொம்புகளுக்கு வர்ணம் பூசி மகிழ்வர். பொங்கல் விழாவையொட்டி, அரூரில் மாடுகளுக்கான கயிறு மற்றும் பொங்கல் வைப்பதற்கான பானைகள் அமோகமாக விற்பனையானது.

இந்த ஆண்டு பல வண்ணங்களில் டிஸ்கோ கயிறு வந்துள்ளது. விவசாயிகள் ஆர்வத்துடன் மூக்கணாங்கயிறு, கயிறு உள்ளிட்டவைகளை வாங்கிச் செல்கின்றனர். கூலி, தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதால் விற்பனை விலையும் கடந்த ஆண்டை காட்டிலும் சற்றே அதிகரித்துள்ளது.

அதேபோல், கலர்பொடி மற்றும் கரும்பு கட்டு, மஞ்சள் கொத்து ஆகியவற்றையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். நேற்று மழை காரணமாக வியாபாரம் மந்தமாகவே நடந்தது.

Tags : Arur ,Pongal festival ,Pongal ,Tamils ,Matupongal ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...