×

சர்வோம் ஏ.ஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!

சென்னை: ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு உயிர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் சர்வோம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. உலகமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி செல்கிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது ஒரு செயற்கை நுண்ணறிவு பூங்கா அல்லது கிராமம் போன்று உருவாகும். ஏ.ஐ. பூங்கா மூலம் உயர் தொழில்நுட்ப தரவு மையங்கள் கிடைக்கும். திட்டத்திற்காக பெரிய தரவு மையம் அமைக்கப்பட உள்ளது; அரசு துறைகளின் எல்லா தரவுகளும் அதில் இருக்கும். சென்னை ஐஐடிக்கு அருகில் தரவு மையத்தை அமைக்க நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags : Tamil Nadu government ,Servom ,Chennai ,Servom AI ,Minister ,D.R.P. Raja ,
× RELATED கோத்தகிரி பகுதியில் சாரல் மழையுடன் பனி மூட்டம்: குளிரால் மக்கள் அவதி