×

உடன்குடியில் அனுமதியின்றி போராட்டம் 203 பேர் மீது வழக்கு பதிவு

உடன்குடி, பிப். 6: உடன்குடியில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 104 ஆண்கள், 99 பெண்கள் என விவசாய நில மீட்புக்குழுவைச் சேர்ந்த 203 பேர் மீது குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடன்குடி கொட்டங்காடு நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் சித்திரைலிங்கம் (58). உடன்குடி வட்டார ஆதியாக்குறிச்சி விவசாய நிலமீட்புக்குழு நிர்வாகியாக இருந்து வருகிறார். இவரது தலைமையில் ஆதியாகுறிச்சி, சிறுநாடார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, படுக்கப்பத்து ஆகிய பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்த 104ஆண்கள், 99 பெண்கள் என மொத்தம் 203 பேர், உடன்குடி – திசையன்விளை ரோடு பஜார் பாரதிதிடல் அருகில் ஒன்றிய அரசின் இஸ்ரோ விரிவாக்கத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லையாம். இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததாக கூறி சித்திரைலிங்கம் உள்ளிட்ட 203 பேர் மீது குலசேகரன்பட்டினம் எஸ்ஐ தனசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post உடன்குடியில் அனுமதியின்றி போராட்டம் 203 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Udangudi ,Kulasekaranpattinam ,Agricultural Land Recovery Committee ,Kotangadu Narayanapuram… ,Dinakaran ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்