×

கீழ்வேளூரில் ஓடும் பேருந்தில் மகளிர் சுய உதவி குழு தலைவியிடம் பணம் அபேஸ்

 

கீழ்வேளூர்,பிப்.1: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த அகரகடம்பனூர் பள்ளிகூட தெருவை சேர்ந்த கணேசன் மனைவி புனிதவள்ளி (55). இவர் சத்தியஜோதி மகளிர் சுய உதவி குழு தலைவியாக உள்ளார். இவரது குழுவைச் சேர்ந்தவர்கள் கீழ்வேளூர் தொடக்க வேளாண கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவி குழு கடன் பெற்றுள்ளனர். அதேபோல் கீழ்வேளூர் இந்தியன் வங்கியில் ஆடி வெள்ளி மகளிர் சுய உதவி குழுவிற்காக கடன் பெற்றுள்ளார்.

நேற்று இரண்டு குழு கடன்களுக்கு மாதா மாதம் கட்ட வேண்டிய தொகை வசூல் செய்து கொண்டு அந்த தொகையான ரூ.67 ஆயிரத்தை வங்கிகளில் செலுத்துவதற்கு தனது ஹேண்ட் பேக்கில் வைத்துக்கொண்டு. அகர கடம்பனூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கீழ்வேளூர் செல்ல தனியார் பேருந்தில் சென்றுள்ளர். கீழ்வேளூர் பேருந்து நிலையத்தில் இறங்கி பார்த்தபோது ஹேண்ட் பேக்கில் பணம் மற்றும் வங்கி புத்தகங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து கீழ்வேளூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட கீழ்வேளூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

The post கீழ்வேளூரில் ஓடும் பேருந்தில் மகளிர் சுய உதவி குழு தலைவியிடம் பணம் அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Kilvellur ,Ganesan ,Punitavalli ,Akarakadambanur Pallikuda Street ,Nagapattinam district ,Sathyajothi Women's Self-Help Group ,Kilvellur Primary Agricultural Cooperative Credit… ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...