×

மாவை சேனாதிராஜா மறைவுக்கு வைகோ இரங்கல்

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தி: ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க வாழ்நாள் முழுவதும் போராடிய மாவை சேனாதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக தன் 82ம் வயதில் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் நேற்று இயற்கை அடைந்தார் என்ற செய்தி ஆறா துயரை அளிக்கிறது.

சிறு வயதிலேயே தமிழ் ஈழ விடுதலைக்காக ஓங்கிக் குரல் கொடுத்தார். ஈழத்தின் தந்தை செல்வா அவர்களை நிறுவனராகக் கொண்ட தமிழரசு கட்சி நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் 1961ம் ஆண்டில் முதன் முதலாகக் களம் இறங்கி போராடினார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரோடும் தோழமையுடன் இணைந்து பணியாற்றினார். சேனாதிராஜாவின் மறைவு ஈழத்தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.

The post மாவை சேனாதிராஜா மறைவுக்கு வைகோ இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Mavai Senathiraja ,Chennai ,MDMK ,General Secretary ,Eelam ,Jaffna ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...