×

தை அமாவாசையை முன்னிட்டு தகட்டூர் அன்னசத்திரம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

வேதாரண்யம், ஜன.30: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாதகட்டூரில் அமைந்துள்ளது அன்ன சத்திரம். 1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அன்னசத்திரத்தில்ஆண்டுதோறும் அட்சய திதி, தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகளாயஅமாவாசை தினங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில்நேற்று தை அமாவாசை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதிகடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு கடற்கரையில் திதி கொடுத்து தர்ப்பணம் செய்து பின்னர் கடலில் புனித நீராடினர்.

பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர சுவாமி ஆலயத்தில் வேதாரண்யேஸ்வரர் , துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து விட்டு வந்த பக்தர்களுக்குவேதாரண்யம் வேதாரண்யேஸ்வர சுவாமி ஆலய கீழ கோபுர வாசலில் தகட்டூர்அன்ன சத்திரம் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்ன சத்திரம் பரம்பரை அறங்காவலர் சுதாராம்குமார் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post தை அமாவாசையை முன்னிட்டு தகட்டூர் அன்னசத்திரம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் appeared first on Dinakaran.

Tags : Thakattur Annachatram ,Thai Amavasya ,Vedaranyam ,Annachatram ,Thakattur ,Vedaranyam taluka, Nagapattinam district ,Akshaya Tithi ,Aadi Amavasya ,Magalaya Amavasya ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு