×

டேராடூனில் இன்று தொடங்குகிறது 38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 14-ம் தேதிவரை நடைபெறும் இந்த விளையாட்டில் 32 பிரிவுகளில் போட்டிகளில் நடைபெறுகின்றன. இதில் தமிழகத்தில் இருந்து 391 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்த்வானி, ருத்ராபூர், சிவபுரி, நியூ தெஹ்ரி ஆகிய 7 மையங்களில் 18 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டில் 38 அணிகளைச் சேர்ந்த10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

உத்தராகண்ட் தேசிய விளையாட்டு போட்டியில் தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து ஒலிம்பிக் விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன.

The post டேராடூனில் இன்று தொடங்குகிறது 38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : 38th National Sports Tournament ,Dehradun ,Dehradun, Uttarakhand ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...