×

முதல்வர் மருந்தகம் அமைக்க தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்


செங்கல்பட்டு: முதல்வர் மருந்தகம் அமைக்க தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் 15.8.2024 சுதந்திர தின விழா உரையில், “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள தொழில்முனைவோர் பி.பார்ம்/ டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் விருப்பமுள்ள தொழில்முனைவோர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். மேலும், முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ₹3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாவும் மருந்துகளாகவும் வழங்கப்படும். விருப்பமுள்ள தொழில்முனைவோர் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post முதல்வர் மருந்தகம் அமைக்க தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Collector ,Arunraj ,District ,Independence Day ,Chief Minister of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய...