- மருதமலை
- அமைச்சர்
- சேகர்பாபு
- தொண்டாமுத்தூர்
- ஆசியா
- மருதமலை முருகன்
- அறநிலையத்துறை அமைச்சர்
- கோயம்புத்தூர்
- இறைவன்
- முருகன்
தொண்டாமுத்தூர்: மருதமலை முருகன் கோயிலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் 160 அடி உயரத்தில் கல்லால் ஆன பிரமாண்ட முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மருதமலை அடிவாரப்பகுதியில் 160 அடி கருங்கல்லால் ஆன முருகன் சிலை வைக்கும் இடத்தை பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி: 90 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது. மருதமலையில், மே மாதத்தில் லிப்ட் வசதி முழுமையாக பக்தர்கள் பயன்பாட்டு வரும். மருதமலை முருகன் கோயிலில், ஆசியாவில் அதிக உயரமாக, 160 அடி உயரத்தில் கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
The post மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க முடிவு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.
