×

வீட்டில் புகுந்த 5 அடி நல்லபாம்பு பிடிபட்டது


செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் அருகே வீட்டில் புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. காட்டாங்கொளத்தூர் அடுத்த நின்னகரை பகுதியில் வசித்து வருபவர் கார்த்தி. இவர் மறைமலைநகர் அருகே பிரபல தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்று வருகிறார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது அவரது வீட்டு வாசலில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கார்த்தி மறைமலைநகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். காட்டாங்கொளத்தூர் அருகே 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு வீட்டில் புகுந்த சம்பவம் அப்போகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வீட்டில் புகுந்த 5 அடி நல்லபாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Kattankolathur ,Karthi ,Ninnagarai ,Maraimalainagar… ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...