- கிராம
- சபா
- பொள்ளாச்சி, அண்ணாமலை
- பொள்ளாச்சி
- ஆனைமலை தாலுகா
- குடியரசு தினம்
- கோயம்புத்தூர் மாவட்டம்
- கிராம சபை
- தின மலர்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவில் உள்ள 84 ஊராட்சிகளில் நேற்று, குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில், ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நாட்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
இந்த ஆண்டில் குடியரசு தினத்தையொட்டி ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று குடியரசு தினத்தையொட்டி ஒன்றிய ஊராட்சி கிராமங்களில் அந்தந்த ஊராட்சி செயலர்கள் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது.
இதில், பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட வடக்கு, தெற்கு, மற்றும் ஆனைமலை தாலுகாவில் ஆனைமலை ஒன்றியத்தில், நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊரட்சியின் திட்ட அறிக்கை, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராமங்களில் முழு சுகாதார திட்டம், கலைஞரின் வீடு கட்டும் திட்டம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைத்தல், மகளிர் திட்டம் மற்றும் கிராம ஊராட்சிகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட 39 ஊராட்சி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஊராட்சி என 84 ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 1500க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களை ஒன்றிய ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், விரிவு அலுவலர்கள் உள்ளிட்ட ஒன்றிய அலுவலர்களும் கண்காணித்தனர்.
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில், பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் பொள்ளாச்சி நகராட்சியுடன் ஆச்சிப்பட்டி சங்கம்பாளையம் கிராமங்களை இணைத்தால், வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டணம் உயர்வு, தொழில் வரி உயர்வு உள்ளிட்டவைகளால் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, பொள்ளாச்சி நகராட்சியுடன் ஆச்சிப்பட்டி ஊராட்சியை இணைக்க வேண்டாம் என அதில் கூறப்பட்டிருந்தது.
The post பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் 84 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.
