சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று (18ம் தேதி) வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 87 லட்சத்து 14,464 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 85 % பணிகள் நிறைவுபெற்றுள்ளது. மேலும், மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்.
The post பொங்கல் பரிசுத்தொகுப்பை 25ம் தேதி வரை வாங்கலாம் appeared first on Dinakaran.
