×

கார் பந்தய வீரர்களுக்கு ஊக்கம் தமிழ்நாடு அரசுக்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு

சென்னை: தமிழக அரசின் செயல்பாடுகள் இந்தியாவில் கார் ரேஸில் பங்கேற்பவர்களுக்கு ஊக்கம் தருவதாக உள்ளது என நடிகர் அஜித் குமார் தெரிவித்தார். கார் பந்தயத்தில் பங்கேற்க அஜித்குமார் போர்ச்சுகல் சென்றுள்ளார். அவர் அங்கு கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சென்னையில் இரவு நேர கார் பந்தயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தியது வரவேற்கத்தக்கது. இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் சென்னையில் தான் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் இந்தியாவின் கார் பந்தய விளையாட்டில் ஈடுபடுவோருக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. அதேபோல் எனக்கு ஆதரவளித்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். துபாய் 24H கார் ரேஸின் போது அஜித் குமார் அணிந்திருந்த உடையில், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முத்திரை இடம்பெற்றிருந்தது. அந்த முத்திரையை அஜித் குமார் வீடியோ ஒன்றில் பெருமையாக காட்டியதும் மக்களிடையே அதிகமாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post கார் பந்தய வீரர்களுக்கு ஊக்கம் தமிழ்நாடு அரசுக்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Ajith Kumar ,Tamil Nadu government ,Chennai ,India ,Portugal ,Chennai… ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...