×

பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட ஜன.21, 27ல் யுஜிசி நெட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை: யுஜிசி நெட் தேர்வு ஜன.21,27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமையினால் யுஜிசி நெட் தேர்வு கலை மற்றும் அறிவியல் என 85 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை ஆகியவற்றுக்கான தகுதி தேர்வாக ஆண்டிற்கு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் விண்ணப்பங்கள் டிசம்பர் 11ம் தேதி வரை பெறப்பட்டது.

இதற்கான தேர்வுகள் ஜனவரி 3ம் தேதி தொடங்கி ஜனவரி 16ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை வரை கொண்டாடப்படுகிறது. இன்று 15ம் தேதி மாட்டுப் பொங்கல், நாளை 16ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படும் தினங்களில் பல்வேறு பாடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தது.

பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் தேர்வு நடத்த தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மாற்று தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் யுஜிசி நெட் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது . மற்ற விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ugcnet.nta.ac.in.) தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

The post பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட ஜன.21, 27ல் யுஜிசி நெட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : UGC NET ,PONGAL FESTIVAL ,NATIONAL EXAMINATION ,AGENCY ANNOUNCEMENT ,Chennai ,National Examination Agency ,UGC ,JRF ,Dinakaran ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...