×

‘தனித்து நின்றால் ஓட்டுகள் பெற முடியாது’: இடைத்தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட தயங்கும் பாஜ

கடந்த 2023 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின்போது திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சியிகள் போட்டியிட்டன. அப்போது அதிமுக கூட்டணியில் இருந்த பாஜ தனது ஆதரவைத் அதிமுகவுக்கு தெரிவித்திருந்தது. அதன்பின் அதிமுக, பாஜ உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, இனி பாஜவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்தது. தொடர்ந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தனியாகவே அந்த கட்சிகள் போட்டியிட்டன. அதில் இரு கட்சிகளுமே தோல்வியைத் தழுவின. அந்தத் தேர்தலுடன் நடைபெற்ற விளவங்கோடு இடைத்தேர்தலிலும் பாஜவும், அதிமுகவும் தனித்தே போட்டியிட்டன. அதிலும் இரு கட்சிகளும் தோல்வியையே சந்தித்தன. திமுக தலைமையிலான காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி வெற்றி பெற்றார். இந்த தொடர் தோல்விகளின் காரணமாக, பின்னர் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அறிவித்தது.

பாஜவும் பின்வாங்கிக் கொண்டது. ஆனால் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவை அந்த தொகுதியில் போட்டியிட வைத்தது. ஆனால் அதில் பாஜ கூட்டணிக்கு தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிகவும் போட்டியிடவில்லை என அறிவித்தது. பாஜ போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜவும் போட்டியிடவில்லை என நேற்று அறிவித்தது. அந்த அறிவிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் பாஜ கூட்டணியில் உள்ள பாமக, தமாகாவும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆதரவின்றி போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தும், தனித்து நின்றாலும் ஓட்டுகள் பெற முடியாது என நினைத்தும் பாஜ இந்த முடிவை எடுத்திருக்கிறது என்பது தெளிவாகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜ வேட்பாளர்கள் பெற்ற வெற்றி கூட அதிமுக கூட்டணியின் தயவுதான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

 

The post ‘தனித்து நின்றால் ஓட்டுகள் பெற முடியாது’: இடைத்தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட தயங்கும் பாஜ appeared first on Dinakaran.

Tags : BJP ,EVKS Elangovan ,Congress ,DMK ,Erode East constituency ,AIADMK ,DMDK ,Naam Tamilar ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...