×

ஜெய் பாபு,ஜெய் பீம் என்ற கோஷத்துடன் காங்கிரஸ் பிரசாரம் நாளை தொடங்குகிறது: ஜெய்ராம் ரமேஷ் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் காந்தியின் புகழை பரப்பும் வகையிலும் அம்பேத்கரை நினைவு கூறும் வகையிலும் காங்கிரஸ் பிரசாரம் நாளை தொடங்குகிறது. சுதந்திரத்துக்காக பாடுபட்ட காந்தியின் புகழ் மற்றும் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை நினைவு கூறும் வகையிலும், நாடு முழுவதும் ஒன்றிய,மாவட்ட, மாநில அளவில் ஜெய்பாபு,ஜெய் பீம், ஜெய் சம்விதான் என்ற கோஷத்துடன் பேரணிகள்,கூட்டங்கள் நடத்தப்படும் என்று கடந்த மாதம் 26ம் தேதி பெலகாவியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மறைவினால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 7 நாள்கள் துக்கம் அறிவிக்கப்பட்டதால் பிரசாரம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ஜெய் பாபு,ஜெய் பீம், ஜெய் சம்விதான் பேரணி கடந்த 27ம் தேதி முதல் நடக்கவிருந்தது.மன்மோகன்சிங் மறைவால் அது ஒத்திவைக்கப்பட்டது.

காந்தி,அம்பேத்கரின் புகழை பரப்பும் வகையிலும் அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் வகையிலும் ஜெய்பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் பேரணி, கூட்டங்கள் நாளை முதல் நடத்தப்படும். இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் ஜனவரி 26ம் தேதி அம்பேத்கரின் பிறந்த ஊரான மவ் நகரில் பிரமாண்ட பேரணி நடத்தப்படும். மகாத்மாவின் புகழை போற்றும் வகையிலும், அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் வகையில் ஜனவரி 26க்கு பின்னரும் பிரசாரம் தொடர்ந்து நடத்தப்படும். மேலும் ஏப்ரல் மாதத்தின் முன் பகுதியில் குஜராத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறும் என்றார்.

The post ஜெய் பாபு,ஜெய் பீம் என்ற கோஷத்துடன் காங்கிரஸ் பிரசாரம் நாளை தொடங்குகிறது: ஜெய்ராம் ரமேஷ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Congress ,Jai Babu ,Jai Bhim ,Jairam Ramesh ,New Delhi ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...