×

எஸ்.ஏ. கல்லூரியில் சர்வதேச திரைப்பட விழா

திருவள்ளூர்: பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஃபா பிர்சமுண்டா சர்வதேச திரைப்பட விழா கல்லூரி திரையரங்கில் பிரமாண்டமாகத் திரையிடப்பட்டது. இந்த விழாவிற்கு கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். இயக்குனர் சாய் சத்யவதி, முதல்வர் மாலதி செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், விழாவில் புகழ்பெற்ற திரைப்பட தொழில்நுட்ப வல்லுநர்கள், பிஃபா விருது பெற்றவர்கள் மற்றும் காட்சி தொடர்பியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். காட்சி தொடர்பியல் துறைத் தலைவர் ஆர்.சீனிவாசன் சினிமாவின் சிறப்பை கவுரவிப்பதில் பிஃபாவின் பங்கை எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் செல்வராமுடன் மாணவர்கள் கலந்துரையாடினர். சிறப்புமிக்க சில திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

The post எஸ்.ஏ. கல்லூரியில் சர்வதேச திரைப்பட விழா appeared first on Dinakaran.

Tags : S.A. International Film Festival ,Tiruvallur ,Pifa Birsamunda International Film Festival ,S.A. Arts and Science College ,Thiruverkot ,Poontamally – Avadi highway ,P. Venkatesh Raja ,
× RELATED பைக் மீது வாகனம் மோதி விபத்து உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப பலி