×

பழைய பொருட்கள் எரிக்காமல் போகி: கலெக்டர் வேண்டுகோள்

திருவள்ளூர்: பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகையாக ”பழையன கழிதலும், புதியன புகுதலுமாக’’ கொண்டாடி வருவது வழக்கம். போகி அன்று செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், மற்றும் நச்சுத் துகள்கள் ஆகியவைகளின் தீங்குகளை அறியாமல் எரித்து வருகின்றனர். இப்படி எரிப்பதால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது.

இதன் மூலம் கண், மூக்கு, தொண்டை, தோல், மூச்சுத்திணறல் மற்றும் இதர உடல் நல குறைவுகள் ஏற்படுகின்றன. இத்தகைய புகையினால் குறுகிய மற்றும் நீண்டகால தீங்குகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளன. இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சட்டப்படி குற்றமாகும். ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 13 ம் தேதி திங்கக்கிழமை அன்று அனுசரிக்கப்படும் போகித் திருநாளில், நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து, நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

The post பழைய பொருட்கள் எரிக்காமல் போகி: கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Pongal ,Bhogi festival ,Bhogi ,
× RELATED புகையில்லா போகி கொண்டாடுவோம்