×

வீரராகவப் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்: நடிகர் உதயநிதி ரசிகர் மன்றத்தினர் வழங்கினர்

 

திருவள்ளூர், ஜன. 12: வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் சொர்கவாசல் திறப்பில் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தண்ணீர், ஆரஞ்சு பழங்களை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் வழங்கப்பட்டது.திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் ரத்ன அங்கியுடன் பெருமாள் பரமபதமவாசல் திறப்பு நேற்று முன்தினம் அதிகாலை நடைபெற்றது. இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்மன்ற மாவட்ட தலைவரும், திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளருமான உமாமகேஸ்வரன் ரூ. 1 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், ஆரஞ்சு பழங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயளாலர் கிரண்குமார், மாவட்ட பொருளாளர் விஜயசாரதி, ராஜ் மோகன், சுமன், இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post வீரராகவப் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்: நடிகர் உதயநிதி ரசிகர் மன்றத்தினர் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Veeraraghava Perumal temple ,Udhayanidhi ,Tiruvallur ,Sorgavasal ,Vaidya Veeraraghava Perumal temple ,Udhayanidhi Stalin ,Sri Devi ,Bhudevi ,Thiruvallur… ,
× RELATED தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு...