×

நாரவாரிகுப்பத்தில் சமத்துவ பொங்கல்

புழல், ஜன. 14: செங்குன்றம் நாரவாரி குப்பம் பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணன், நிர்வாக செயல் அலுவலர் யமுனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்புத் தோரணங்கள் கட்டப்பட்டு பொங்கலிட்டு பேரூராட்சி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் சர்க்கரைப் பொங்கலை பேரூராட்சித் தலைவர் தமிழரசி குமார் வழங்கினார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நாரவாரிகுப்பத்தில் சமத்துவ பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Equality Pongal ,Naravari Kuppam ,Sengunram Naravari Kuppam Panchayat ,Panchayat ,Tamilarasi Kumar ,Vice Chairman ,Narayanan ,Administrative Executive Officer ,Yamuna ,Equality Pongal in Naravari ,Kuppam ,
× RELATED திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா