×

பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் பொங்கல் விழா

 

பூந்தமல்லி, ஜன. 12: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூந்தமல்லி பார்வைத் திறன் குறைபாடுடையோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பள்ளி முதல்வர் அருளானந்தன் தலைமை தாங்கினார்.‌ மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகர்மன்ற உறுப்பினர் தீபா யுவராஜ், பள்ளி துணை முதல்வர் கலைச்செல்வி மற்றும் பாபு என்ற யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். பின்னர் கரும்பு, மஞ்சள் வைத்து, புதுப்பானையில் புத்தரிசி, பருப்பு, வெல்லம், முந்திரி, ஏலக்காய் சேர்த்து பொங்கல் வைத்தனர். அப்போது மாணவர்கள் பாடல்களை பாடினர். தொடர்ந்து மாணவர்களுக்கு பொங்கல், கரும்பு, மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Poontamally Blind School ,Poontamally ,Pongal ,Poontamally Government ,Higher Secondary School ,Arulanandan ,Lion Sudhakar ,Council… ,Blind ,School ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை...