×

மேலூர் அருகே உற்சாக மாட்டு வண்டி பந்தயம்

bullock cart race மேலூர் : மேலூர் அருகே வெள்ளலூர் நாட்டை சேர்ந்த புலிமலைபட்டியில் உள்ளது  முனிசாமி, பாலமுருகன் கோயில். இந்த கோயிலின் 36ம் ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, நேற்று இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டிகள் பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. மேலூர் புலிமலைப்பட்டி சாலையில் நடைபெற்ற இப்போட்டியின் பந்தய தூரம், பெரிய மாட்டிற்கு 9 கி.மீ, சிறிய மற்றும் நடு மாட்டிற்கு 6 கி.மீ, தூரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

பெரிய மாடுகளில் 13 ஜோடிகள் கலந்து கொண்டதில், புலிமலைப்பட்டி முனிசாமி காளைகள் முதல் பரிசை பெற்றது. அரிமளம் சேற்று மேல்செல் அய்யனார், மட்டங்கிபட்டி காவியா கதிரேசன், ஏனாதி ஏடிஎன் ஆகியோரின் காளைகள் அடுத்தடுத்த பரிசுகளை வென்றன. நடுமாட்டில் 16 ஜோடிகள் கலந்து கொண்டதில், முதல் பரிசை மேல செம்பன் மாரி லிங்கேஸ், 2ம் பரிசு மஞ்சநாயக்கம்பட்டி வீரஜோதி, 3ம் பரிசு புலிமலைப்பட்டி முனிசாமி, 4ம் பரிசு நாட்டரசன் கோட்டை பழனி காளைகள் வென்றது.

சிறிய மாடுகள் பிரிவில் 33 ஜோடிகள் போட்டியிட்டதால் போட்டி 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. போட்டிகளை மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரசிகர்கள் மழையைும் பொருட்படுத்தாமல் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து கண்டு களித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை டைகர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.

 

The post மேலூர் அருகே உற்சாக மாட்டு வண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Tags : Malur ,Balamurugan ,Munisami, Balamurugan ,Vellalur ,36th Kartika Dipa festival of ,Cow ,Mellore ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...