×

கோயிலில் உண்டியல், நகை எடுத்தால் சிக்கி கொள்வோம் என பூஜை பொருட்களை மட்டும் திருடிய வினோத கொள்ளையர்கள் சிக்கினர்

கோபி : கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி மற்றும் சிறுவலூர் காவல் நிலைய பகுதியில் பல்வேறு கோயில்களில் பூஜை பொருட்களை மட்டும் திருடி வந்த வினோத கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கோபி அருகே உள்ள சிறுவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கெட்டிசெவியூர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கோயில் ஒன்றின் பூட்டு உடைக்கப்பட்டு கோயிலில் இருந்த பித்தளை மற்றும் செம்பு உலோகங்களால் ஆன பூஜை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

அதே போன்று, கடந்த இரு நாட்களுக்கு முன் கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன புலியூரில் உள்ள ஏரி முனியப்பன் கோயில், அதே பகுதியில் உள்ள பெருமாள் கோயில், வைரமங்கலத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோயிலில் இருந்த பூஜை பொருட்களை கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது.

இந்த சம்பவத்தின் போது பொதுமக்கள் நடமாட்டம் இருக்கவே, கொள்ளையர் கொள்ளை முயற்சிகளை கைவிட்டு தப்பினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கவுந்தப்பாடி அருகே சேவாக்கவுண்டனூரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலிலும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது குறித்து கோயில் தர்மகர்த்தா பழனிச்சாமி (64) அளித்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில், நேற்று முன்தினம் இரவு கோயில் பூசாரி முருகேசன், வழக்கம் போல் பூஜை முடிந்த பிறகு கோயிலை பூட்டி சென்றதும், அதன் பின்னர் நள்ளிரவில் கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவை உடைத்து, அதில் இருந்த சுமார் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெண்கல மணி, குத்துவிளக்கு, பித்தளை குடம் என பூஜை பொருட்களை மட்டும் கொள்ளையடித்து சென்று இருப்பதும், கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.

தொடர் விசாரணையில், வைரமங்கலம், கெட்டிசெவியூர், சின்னபுலியூர் ஆகிய பகுதிகளிலும் கோயில் கொள்ளை சம்பவத்தில் உண்டியல் உடைக்கப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.
மேலும், கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, ஒரு முதியவர், அவருடன் ஒரு பெண் மற்றும் ஒரு வாலிபர் நடந்து செல்வது பதிவாகி இருந்தது.

இதை வைத்து தேடிய போது, முதியவரும், அவருடன் இருந்த பெண்ணும் கோபி அருகே மொடச்சூரில் உள்ள சந்தை திடலில் இருப்பது தெரிய வந்தது. இருவரையும் பிடித்து விசாரணை செய்த போது அந்த முதியவர் சாமிநாதன் (60), உடன் வந்த வாலிபர் பெரியபுலியூரை சேர்ந்த தனுஷ்குமார் (19) என்பது கண்டுபடிக்கப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த அந்த பெண், கணவருடன் சென்றாலும், நேரடியாக கொள்ளை வழக்கில் ஈடுபடாத நிலையில் அவரை போலீசார் விடுவித்தனர்.

The post கோயிலில் உண்டியல், நகை எடுத்தால் சிக்கி கொள்வோம் என பூஜை பொருட்களை மட்டும் திருடிய வினோத கொள்ளையர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Kobi ,Kaundapadi ,Siruvalur police station ,Gobi ,Srivalur Police Station ,Kobe ,
× RELATED மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது