×

ரூ.300 கோடி மோசடி: நாமக்கல் நிதி நிறுவன அதிபர் பொன்னு வேலப்பன் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் பொன்னு வேலப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தைப்பேட்டை புதூரில் கடந்த 35 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்த பொன்னு வேலப்பன் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த பொன் வேலப்பனை பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய பொன்னு வேலப்பனின் மனைவி வசந்தி, மகன் சரவணன், மகள் உமா உள்ளிட்டோரை போலீஸ் தேடி வருகிறது.

 

The post ரூ.300 கோடி மோசடி: நாமக்கல் நிதி நிறுவன அதிபர் பொன்னு வேலப்பன் கைது appeared first on Dinakaran.

Tags : Namakkal Finance Corporation ,Ponnu Velapan ,Namakkal ,Ponnu Velappan ,Sanpipet Putur ,Dinakaran ,
× RELATED காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொலை?