×

‘’மொட்டை போடவேண்டும்’’ என்று சவர தொழிலாளியை அழைத்துசென்று கூகுள் பே மூலம் 20,000 ரூபாய் பறிப்பு: தப்பியோடியபோது வாலிபர் கை முறிந்தது

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனி 6வது தெருவை சேர்ந்தவர் ராம்பால் (42). இவர் அந்த பகுதியில் சலூன் நடத்துகிறார். கடந்த 31ம்தேதி மாலை முனுசாமி (36) என்பவர் வந்து தனது அப்பாவுக்கு மொட்டை போட வேண்டும் என்று கூறி கொடுங்கையூர் ஜம்புலி தெரு பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு ராம்பாலை அழைத்துச்சென்றுள்ளார். இதன்பின்னர் அங்குவைத்து கத்தியை காட்டி மிரட்டி ராம்பாலிடம் பணம் கேட்டபோது தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே அவரது செல்போனை பிடுங்கி கூகுள் பே மூலம் 20 ஆயிரம் ரூபாயை தனது வங்கி கணக்குக்கு மாற்றிக்கொண்டு முனுசாமி தப்பிவிட்டார்.

இதுகுறித்து ராம்பால் கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்குபதிவு செய்து இன்று காலை பெரம்பூர் சுப்பிரமணிய பாரதி தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து முனுசாமியை கைது செய்தனர். அப்போது அவர் தனது கத்தியை கொடுங்கையூர் ஆர்வி.நகர் பகுதியில் பதுக்கிவைத்துள்ளதாக தெரிவித்ததால் அவரை போலீசார் அழைத்துச்சென்று கத்தியை கைப்பற்றினர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடும்போது கீழே விழுந்ததில் முனுசாமியின் வலது கை உடைந்தது. இதனால் முனுசாமியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மாவு கட்டுபோட்டனர். இதன்பின்னர் முனுசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ‘’மொட்டை போடவேண்டும்’’ என்று சவர தொழிலாளியை அழைத்துசென்று கூகுள் பே மூலம் 20,000 ரூபாய் பறிப்பு: தப்பியோடியபோது வாலிபர் கை முறிந்தது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Rampal ,6th Street ,Chennai Kotungaiur Venkateswara Colony ,Munusamy ,
× RELATED பெரம்பூர் ரயில் நிலையம் அருகே...