×

ஒப்பந்தாரருக்கு பில் கிளீயர் பண்ண லஞ்சம் பொதுப்பணித்துறை பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஒப்பந்ததாரரின் பில்களை வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக செயல்பட்டவர் பார்த்திபன். இவர் கடந்த 2007ல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் செய்து கொடுத்த பணிகளுக்கான பில்களை வழங்குமாறு பொதுப்பணித்துறை பொறியாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு, பில்களை வழங்க 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தயாளன் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக பார்த்திபன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தயாளன் பணத்தை வாங்கும்போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 2011ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தயாளனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post ஒப்பந்தாரருக்கு பில் கிளீயர் பண்ண லஞ்சம் பொதுப்பணித்துறை பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Special Court ,Chennai ,Parthiban ,Tamil Nadu Public Works Department ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் ஜாமின் கோரிய...