×

மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது

 

ஈரோடு, டிச. 24: சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  அதன்படி, ஈரோடு மாவட்டம் கோபி, பவானி மற்றும் அம்மாபேட்டை போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த சிவகங்கை மாவட்டம், கரடிகுடி பகுதியைச் சேர்ந்த பில்லர் (42), பவானியை அடுத்துள்ள சின்ன மோளபாளையத்தை சேர்ந்த கோமதி (38), மைலம்பாடி, காளநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த தேவி (52), சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்துள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (38) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 99 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

The post மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode District Kobi ,Bhavani ,Ammapete police ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் பவானிசாகர்...