×

உடன்குடி அருகே அங்கன்வாடியில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்தது

*குழந்தைகள் வரும் முன் நிகழ்ந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

உடன்குடி : தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி யூனியனுக்குட்பட்ட மாநாடு தண்டுபத்து ஊராட்சி அத்தியடிதட்டில் அங்கன்வாடி அமைந்துள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

வழக்கம்போல் நேற்று காலை அங்கன்வாடி மையத்தை திறப்பதற்காக பணியாளர்கள் வந்தனர். அப்போது திடீரென கட்டிடத்தின் மேற்கூரை கான்கீரிட் பூச்சுக்கள் பெயர்ந்து குழந்தைகள் அமரும் சேர்களில் விழுந்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சிக்குள்ளான பணியாளர்கள் உடனடியாக அங்கன்வாடி மையத்திற்குள் செல்லவில்லை. அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு பணியாளர்கள் தகவல் தெரிவித்து அங்கன்வாடியை மூடினர். அருகிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு நேற்று அங்கன்வாடி மையம் செயல்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உடன்குடி அருகே அங்கன்வாடியில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Ebenkudi ,Anganwadi ,Dandupathu Panchayat Athiyadithath ,Ebenkudi Union ,Tuticorin District ,Dinakaran ,
× RELATED வாய்க்கால் பாசனத்தை நம்பி இருப்போர்...