×

செங்கம் அருகே தீபவிழா முன்னிட்டு அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம்

செங்கம்: செங்கம் அருகே கார்த்திகை தீபவிழாவை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நினைத்தாலே முக்திதரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 13ம்தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. அன்றைய தினம் அனைத்து வீடுகளிலும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். தொடர்ந்து 3 நாட்கள் வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படும். கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி களைகட்டியுள்ளது.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், `செங்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலை செய்து வருகிறோம். மக்கள் பலர் தற்போது சமையலுக்கு குக்கர் உள்ளிட்ட பாத்திரங்களை தவிர்த்துவிட்டு மீண்டும் மண்ணால் ஆன பாத்திரங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதற்காக நாங்கள் பருப்பு சட்டி, பானை, கரண்டி, டம்ளர், பூந்தொட்டி உள்ளிட்டவற்றை தயாரித்து விற்கிறோம். தற்போது தீபவிழாவையொட்டி செங்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 லட்சம் அகல் விளக்குகள் கைகளால் தயாரிக்கப்படுகிறது. ஆனால் மக்கள் இவற்றை வாங்குவதை குறைத்துக்கொண்டு அச்சில் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்குகின்றனர்.

இதனால் சில ஆண்டுகளாக கைகளால் தயாரிக்கப்படும் அகல் விளக்குகளின் விற்பனை மந்தமாக உள்ளது. ஆனால் தமிழக அரசு, மண்பாண்ட தொழிலாளர்களின் நலன் கருதி ஏரி, குளங்களில் மண் அள்ள அனுமதித்துள்ளதை வரவேற்கிறோம். மேலும் எங்கள் நலன்காக்க சில சலுகைகளை வழங்கவேண்டும் என ெதரிவித்தனர்.

The post செங்கம் அருகே தீபவிழா முன்னிட்டு அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : CHENGAM ,KARTHIKAI ,DIPAVIZHA ,SENGAM ,Karthigai Diphathrivizhya ,Annamalaiyar Temple ,Thiruvannamalai ,Agal Lantern ,
× RELATED குப்பநத்தம் அணை வெள்ளத்தில் சிக்கிய 15 ஆடுகள்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்